யாழில் பணத்தை காலால் மிதித்த வர்த்தகர் வாக்குமூலம்

 


இலங்கையில் புழக்கத்தில் உள்ள ஐந்தாயிரம் ரூபாய் தாள்களை காலில் போட்டு மிதித்த சம்பவம் தொடர்பில் தியாகி அறக்கொடை நிறுவனத்தின் தலைவர் வாமதேவா தியாகேந்திரனிடம் யாழ்ப்பாண பொலிஸார் வாக்கு மூலத்தை பதிவு செய்துள்ளனர். 

தியாகி அறக்கொடை நிறுவன தலைவரின் மகளின் 40ஆவது பிறந்த தினத்தினை முன்னிட்டு, கடந்த 7ஆம் திகதி யாழ்ப்பாணம் நாவலர் வீதியில் உள்ள தனது அறக்கட்டளை அலுவலகத்தின் முன்பாக வைத்து  வறிய மக்களுக்கு நிவாரணம் வழங்கினார். 

அதன் போது, ஊடகம் ஒன்றிற்கு தியாகேந்திரன் கருத்து தெரிவிக்கும் போது , 

இன்றைக்கு நிவாரணம் பெறுவதற்கு தான் எதிர்பார்த்த மக்கள் வரவில்லை எனக் கூறி , தனது சட்டை பையில் இருந்த பெருமளவான ஐந்து ஆயிரம் ரூபாய் தாள்களை எடுத்து நிலத்தில் போட்டு சப்பாத்து காலால் மிதித்த படி நின்று கருத்து தெரிவித்தார். 

குறித்த காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகியதை அடுத்து பெருமளவானோர் கடும் எதிர்ப்புக்களை தெரிவிப்பதுடன் கண்டனங்களையும் பதிவு செய்தனர். 

இந்நிலையில், குறித்த சம்பவம் தொடர்பில் பொலிஸ் உயர்மட்ட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் , தியாகேந்திரனை நேற்றைய தினம் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்திற்கு பொலிஸார் அழைத்து வாக்குமூலத்தினை பெற்றனர். 

பெறப்பட்ட வாக்கு மூலத்தின் அடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸார் தெரிவித்தனர். 


Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Section