கிறிஸ்டியானோ ரொனால்டாவின் சாதனையை முறியடித்த துருக்கி வீரர்

 


யூரோ கால்பந்து தொடரில் தனது மிக இள வயதில் கோல் அடித்த வீரர் என்ற சாதனையை துருக்கிய வீரர் 'அர்டா குலர்' படைத்துள்ளார். இதனூடாக கிறிஸ்டியானோ ரொனால்டோவின் சாதனையை அவர் முறியடித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.


நடப்பு யூரோ 2024 கால்பந்து தொடரின் ஜோர்ஜியா அணிக்கெதிரான போட்டியின் போது துருக்கி வீரர் அர்டா குலர் (Arda Guler) கோல் அடித்ததன் ஊடாக அணியை வெற்றிப் பாதைக்கு ம்ன்னெடுத்துச் சென்றுள்ளார்.


குறித்த போட்டியில் துருக்கி அணி 3 - 1 என்ற கிணக்கில் கோல் ஜோர்ஜியா அணியை வீழ்த்தியுள்ளது. துருக்கி அணி சார்பில் மெர்ட் முல்டுர் (25), அர்டா குலர் (65) மற்றும் முகம்மது கெரெம் (90+7) ஆகியோர் கோல்களை அடித்தனர்.


இதில் அர்டா குலர் (Arda Guler) அடித்த தனது கோல் மூலம், இளம் வயதில் யூரோ கால்பந்து தொடரில் கோல் புரிந்து சாதனை புரிந்த வீரர் எனும் சாதனையை நிகழ்த்தியுள்ளார். அத்துடன் கிறிஸ்டியனோ ரொனால்டோவின் சாதனையை இவர் முறியடித்தார்.


கிறிஸ்டியானோ ரொனால்டோ (Cristiano Ronaldo) 19 வயதில் 128 நாட்களில் கோல் அடித்த நிலையில், அர்டா குலர் 19 வயது 114 நாட்களில் கோல் அடித்து சாதித்துள்ளார். 


அர்டா குலர் 2019ஆம் ஆண்டில்நடைபெற்ற Turkish Cupin 2023 தொடரை Fenerbahce அணி வெல்வதற்கு உதவியதுடன், சிறந்த ஆட்ட நாயகனுக்கான விருதையும் அவர் பெற்றுக் கொண்டார்.


அத்துடன், ரியல் மாட்ரிட் அணிக்கு மாறிய குலர் குறித்த அணிக்காக 10 போட்டிகளில் 6 கோல்கள் அடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


"துருக்கியின் மெஸ்ஸி" என்று வர்ணித்துக் குறிப்பிடப்படும் அர்டா குலர் , சமீபத்திய மாதங்களில் நடந்த கால்பந்து போட்டிகளின் அடிப்படையில் அசுற வளர்ச்சியை கண்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


துருக்கி தலைநகர் அங்காராவைச் சேர்ந்த இவர் 09 வயதிலிருந்து கால்பந்து விளையாட்டில் ஈடுபாடு வருகின்றார். 16 வயது 174 நாட்கள் இருக்கும் நிலையில் அர்டா குலர் தேசிய அணிக்கு உள்வாங்கப்பட்டு விளையாடுவதற்கு அழைத்து வரப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Section