முஸ்லிம் விவாக - விவாகரத்துச் சட்டம் விரைவில் திருத்தப்படவுள்ளதாக நீதி அமைச்சர் விஜேதாத ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.
உலகத்திலுள்ள அனைத்து நாடுகளாலும் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ள பெண்களின் திருமண வயதை 18 ஆக நிர்ணயித்து முஸ்லிம் விவாக விவாகரத்து சட்டம் விரைவில் திருத்தப்படுமென அவர் மேலும் குறிப்பிட்டார். இதற்கு அனைத்து தரப்பினரும் இணங்கியுள்ளதாகவும் கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது.