சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறும் அவுஸ்திரேலிய வீரர்

 



சர்வதேசப் போட்டியிலிருந்து ஓய்வு பெறுவதாக அவுஸ்திரேலியா அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் டேவின் வோர்னர் அறிவித்துள்ளார்.


T20 உலகக் கிண்ணத் தொடர் மேற்கிந்தியத் தீவுகளில் நடைபெற்று வருகின்றது. இத்தொடரில் அவஎதிரேலியா அணி அரையிறுதி வாய்ப்பை தவற விட்டது. சூப்பர் 08 சுற்றில் பங்களாதேஷ் அணியிடம் அவுஸ்திரேலியா வெற்றியீட்டியதையடுத்து, ஆப்கானிஸ்தான் மற்றும் இந்தியாவிடம் பலத்த தோல்வியை தழுவிக் கொண்டது.


இதனால் ஆப்கானிஸ்தான் - பங்களாதேஷ் ஆட்டத்தின் இறுதியில் அவுஸ்திரேலியா அரையிறுதிக்கு செல்லுமா? அல்லது வெளியேறுமா? என்ற நிலையில் ஆப்கானிஸ்தான் அணி வெற்றியை தனதாக்கிக் கொண்டு அரையிறுதிக்கு தகுதியடைந்தது.


இதன் மூலமாக, அவுஸ்திரேலிய அணியின் அரையிறுதி கனவு கலைந்த நிலையில், குறித்த அணியின் தொடக்க வீரர் டேவிட் வோர்னர் சர்வதேச கிரிக்கெட் போட்டியிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.


அவர் இதுவரை அவுஸ்திரேலியா அணிக்காக 18,995 ஓட்டங்களைப் எடுத்துள்ளார். இதில் 49 சதங்களும் அடங்கும். அவுஸ்திரேலிய அணி 02 ஒருநாள் உலகக் கிண்ணங்கள் வென்ற அணியில் வோர்னரும் இடம் பிடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. அத்தோடு, T20 உலகக் கிண்ண அணியிலும், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் அணியிலும் வோர்னர் பங்கேற்றார் என்பதும் சுட்டிக்காட்டத்தக்க அம்சமாகும்.

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Section