75 ஆண்டுகளின் பின்னர் பல்கலைக்கழகம் தெரிவான பள்ளித்திடலின் சரித்திர நாயகி மாணவி சியாதா



ஸெய்ன்ஸித்தீக் 

பொலநறுவை மாவட்டத்தில் 1949ஆம் ஆண்டு உருவான பழைய ஊர் பள்ளித்திடல் எனும் ஊராகும். இங்கு பாடசாலை 1992 ஆம் ஆண்டு வரை சின்னக் குளனியில் நடைபெற்று வந்தது. பின்பு விடுதலைப் புலிகளின் தாக்குதலினால் வெளி ஊர்களுக்கு இடம்பெயர்ந்து 2002 ஆம் ஆண்டு பள்ளித்திடல் மக்கள் மீள்குடியேற்றப்பட்டார்கள்.  


அப்போது புதுக்குடியிருப்பில் 50 வீட்டுத் திட்டங்கள் அமைக்கப்பட்டு அந்த இடத்தில் பாடசாலை கட்டப்பட்டது. அந்தப் பாடசாலை பள்ளித்திடல் முஸ்லிம் கனிஷ்ட வித்தியாலயமாக நடைபெற்று வந்தது. 


ஆரம்பத்தில் ஒன்று தொடக்கம் ஐந்து வரையே வகுப்புக்கள் ஆரம்பமாக இருந்தது. 2007 இல்  இப் பாடசாலைக்கு M.I. கபீர் ஆசிரியர் புதிய அதிபராக வந்தார். அவரே இக் கிராமத்தின் முன்னேற்றத்துக்கு ஒளி விளக்காக இருந்தார் . அவரின் முயற்சியினால் எமது பாடசாலையின் பெயர் பொ/அந்-நூர் மு.க.வி ஆக மாற்றம் பெற்றது. 


ஆறு தொடக்கம் பதினொன்று வரையிலான வகுப்புக்கள் ஆரம்ப மானது. 2012ஆம் ஆண்டு முதலாவது  கல்விப் பொதுத் தர சாதாரண தரம் ஆரம்பமானது பரீட்சையில் 13 மாணவர்கள் தோற்றி    சாதாரண தர சித்தி பெற்று (2A ,2B ,2C ,S)  பெறுபேற்றைப் பெற்று 3 மாணவிகளான  A.F.றிம்ஸானா , F.F.அப்றா , I.கியாசிதா  ஆகியோர்  கா.பொ.த உயர்தரத்திற்கு தகுதி பெற்றனர். 


அந்த மாணவர்கள் மேற்கொண்டு உயர்தரக் கல்வியினை பயில்வதற்கான ஆசிரியர்கள் பற்றாக்குறை, பாடசாலையில் போதிய வளங்கள் காணப்படாமை போன்ற  காரணங்களால் வெளி ஊர்களுக்குச் சென்று அவர்களினுடைய உயர்கல்வியினை மேற்கொள்வதற்கான சூழ்நிலை ஏற்பட்டது.  


அதன்பிறகு அப்போது பாடசாலையில் 184 மாணவர்கள் இருந்தார்கள்.அதன்பிறகு 2016 ஆம் ஆண்டு முதன்முறையாக 1 மாணவி 5 ஆம் தர புலமைப் பரிசில் பரீட்சையில்  153 புள்ளிகளைப் பெற்று முதன் முறையாக K.F.அப்fனா என்ற மாணவி சித்தியடைந்தார். 


அதனை அடுத்து 2020 இல்  5 ஆம் தர புலமைப்பரீட்சையில் 2 மாணவர்கள் சித்தியடைந்தனர் .அதனை அடுத்து 5 ஆம் தர புலமைப் பரிசில் பரீட்சையில் 2023 இல் ஒரு மாணவி சித்தியடைந்தார்.


 இவ்வாராக மாணவர்களுடைய சித்தி மட்டம் காணப்பட்டதை அடுத்து 2018 சாதாரண தரம், உயர்தரம் ஆரம்பிக்கப்பட்டது.  இப் பாடசாலை மகா வித்தியாலயமாகவும் மாற்றம் பெற்றது. அதிலிருந்து மாணவர்கள் 2023 உயர்தரத்திற்கு 4வருடங்கள் அளவில் தோற்றிய இந்த மாணவர்களில் இம்முறை தோற்றிய  மாணவ மாணவிகளில் நான்கு மாணவர்கள்  சித்தியும் ஒரு மாணவி I. சியாதா என்பவர் ABC  தரத்தினையும் 1.1 புள்ளிகளைப் பெற்று பல்கலைக்கழகமும் தெரிவாகி இருக்கிறார். 


இச்சித்தியானது "பள்ளித்திடலை" பாரறியச் செய்தது. இவ் ஊரின் வரலாற்றை வானுக்கு உயர்த்தியது. இந்த மாணவியின் சித்தி இப் பாடசாலையின் 75 வருட காலத்தின் பின்னரான சாதனையாகும்.


மேலும் 2020 ஆம்  ஆண்டுநடைபெற்ற சாதாரண தரப் பரீட்சையிலும் சாதனை படைத்திருக்கிறார்.


மேலும் இப் பாடசாலை தொடர்ச்சியாக மாணவர்கள் பல்கழைக்கழகம் செல்வதற்கு ஆசான்களும், பழைய மாணவர் சங்கத்தினரும் உழைத்து வரும் இத்தருணத்தில்  முன்னால் அதிபர் 𝙼.𝙸.𝙼 கபீர் ஆசிரியர்தான்  பாடசாலையின் இந்த வளர்ச்சிக்கு ஆணி வேர் என்பதை பாடசாலை அபிவிருத்தி சங்கத்தினரும், பெற்றார்களும் ஆனந்தத்துடன் தெறிவித்துக் கொள்கிறார்கள்.


மேலும் இந்த  பாடசாலையில் கடமை புரிந்த ஆசிரியர்களுக்கு பழைய மாணவர்கள், பாடங்களை நடத்துவதற்கு உதவி செய்த  சங்கங்கள் மற்றும் பாடசாலையின்  புதிய அதிபர் M.M. அலி அக்பர் ஆசிரியரரையும் மிகவும் நன்றி உணர்வோடு ஞாபகப்படுத்துகிறார்கள்.


தகவல் - F.F.அப்ரா அம்ஜத் (BA)

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Section