இலங்கையில் 5,000 பேர் எலிக் காய்ச்சலால் பாதிப்பு. அதிகம் பாதிக்கப்பட்ட மாவட்டங்களின் விபரம் இணைப்பு

 



இலங்கையில் கடந்த 06 மாதங்களில் 5,000 எலிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தொற்றுநோயியல் திணைக்களம் அறிவித்துள்ளது.


காய்ச்சல் அல்லது எலிக்காய்ச்சலின் அறிகுறிகள் காணப்பட்டால் உடனடியாக மருத்துவ சிகிச்சையினை பெறுமாறு சுகாதார அதிகாரிகள் மக்களை கேட்டுக் கொள்கிறார்கள்.


இந்நோயை ஏற்படுத்தும் பாக்டீரியாவானது  எலிகளின் சிறுநீரில் காணப்படுவதனால் கால்நடைகள், நாய்கள் மற்றும் பன்றிகளின் மலம் மற்றும் சிறுநீரில் இருப்பது தற்போது கண்டறியப்பட்டுள்ளது.


இந்நோய்க்கான பக்டீரியாக்கள் நீரில் கலந்த பின்னர், அது மனிதனின் கால்களில் காணப்படுகின்ற காயங்கள் மற்றும் கண்கள், வாயின் வழியாக மனித உடலில் நுழைகிறது.


இது குறித்து கருத்து தெரிவித்த தொற்று நோயியல் நிபுணர் டொக்டர் துஷானி தாபரே, 01 வருடத்தில் எலிக் காய்ச்சலால் 100 அல்லது அதற்கு மேற்பட்ட இறப்புகள் பதிவாகி வருவதாகவும் தெரிவித்தார்.


அத்துடன், பல சமயங்களில் சிகிச்சை பெறாதவர்கள் மரண்ப்பதாகவும் தெரிவித்த வைத்தர், எலிக்காய்ச்சலுக்கு மருந்துகள் கைவசம் இருப்பதாகவும், முறையான சிகிச்சை பெற்று இந்நோயைக் குணப்படுத்த முடியும் என்றும் தெரிவித்தார்.


கால்களில் வெட்டுக் காயங்கள் அல்லது வேறு ஏதேனும் காயங்களுள்ளவர்களுக்கு அதிக ஆபத்தில் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.


மேலும், அசுத்தமான நீரில் முகம், வாய் அல்லது மூக்கைக் கழுவுவதன் மூலமும் பாக்டீரியாவை பரவலாம் என்று டொக்டர் மேலும் தெரிவித்தார். 


இரத்தினபுரி, காலி, கேகாலை, மாத்தறை, களுத்துறை, மொனராகலை, குருணாகலை போன்ற மாவட்டங்களிலுள்ள விவசாயிகள், மாணிக்கக்கல் அகழ்வுப் பணியாளர்கள் மற்றும் கழிவுநீர், கால்வாய் சுத்திகரிப்பு தொழிலாளர்கள் எலிக்காய்ச்சல் பலர் அதிகமாக அபாயத்தில் உள்ளதாகவும் வைத்தியர் சுட்டிக் காட்டினார். 


எனவே, இவ்விடயத்தை கருத்திற்கொண்டு யாருக்கேனும் எலிக்காய்ச்சல் அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக சிகிச்சையினை பெறுமாறுமாறும் பொது மக்கள் அறிவுறுத்தப்படுகின்றனர்.

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Section