தென்னாப்பிரிக்காவின் குவாசுலு-நடால் கடலோரப் பகுதியில் ஏற்பட்ட சூறாவளி காரணமாக 11 பேர் உயிரிழந்துள்ளனர்.
குறித்த சூறாவளி காரணமாக 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளதுடன் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும், சூறாவளி ஏற்பட்ட பகுதியில் அதிக சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.