உணவுப் பாதுகாப்பு, மற்றும் உணவு உற்பத்தியினை உறுதிப் படுத்தும் தேசிய நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் ஓர் அங்கமாக
எமது இறக்காமம் கமநல சேவை நிலையத்துக்குட்பட்ட பயிர்ச் செய்கையாளர்கள் அனைவருக்குமாக கிழக்கு மாகாண விவசாயத் திணைக்களத்தினால் விவசாயப் பொருளாதார அபிவிருத்திக்கு பல்வேறு வகையான உதவித் திட்டங்கள் கடந்த வருடங்களைப் போன்று இவ்வாண்டும் PSDG - 2024 மானிய உதவித் திட்டங்களினூடாக அத்தனை வகையான விவசாய உள்ளீடுகள், நடுகைப் பொருட்கள், தொழினுட்ப ஆலோசனைச் சேவைகள் போன்றவற்றை வழங்கி வருவதுடன் இது விடயமாக சுற்றிவர வேலியும், நீர் வசதியுடனும் உள்ள பயிர் செய்கைக்கு தயாறாய் உள்ள காணிச் சொந்தக் காறர்கள் எமது இறக்காமம் விவசாய விரிவாக்கல் நிலையப் பொறுப்பு அதிகாரியான விவசாயப் போதனாசிரியரை சந்தித்து உங்களது மேற் கூறிய தேவைகளை எமது காரியாலயத்தில் இடப்பட்டுள்ள பயனாளிகள் உள்ளீடுகழுக்கு விண்ணப்பிக்கும் பதிவேட்டில் காரியாலயத்திற்கு விஜயம் செய்து பதிவதன் மூலம் பல வரப்பிரசாதங்களை அடையலாம் என்று இத்தால் அறிவுறுத்தப் படுகிறீர்கள்.
உதாரணமாக :-
● 50% மானிய விலையில் பழ மரக்கன்றுகள்.
● 50% மானிய விலையில் மரக்கறி விதைகள்.
● 50% மானிய விலையில் மறுவயற் பயிர் விதைகள் ( பாசிப்பயறு, கெளபி, சோளம், கச்சான் ஆதியன.
● மண் பரிசோதனை சேவை.
● நோய் பீடைகள் பற்றிய இலவச தொழினுட்ப ஆலோசனை சேவை.
● விவசாயக் கிணறு அமைக்க.
● உங்கள் விவசாயப் பண்ணைகளை சிறந்த விவசாய நடைமுறையின் கீழ் பதிவு செய்யலாம்.
● 50% மானியத்தில் போகத்திற்கு தேவையான உள்ளீடுகள் அத்தனையையும் பெற்றுக் கொள்ள.
● 50% மானியத் திட்டத்தின் கீழ் மா அரைக்கும் இயந்திரம்.
● 50% மானியத் திட்டத்தின் கீழ் மிளகாய் அரைக்கும் இயந்திரம்.
● நெல் நாற்று நட தேவையான ( Parachute tray, Paddy Seeder)
● 50% மானியத் திட்டத்தின் கீழ் தேனி வளர்ப்பு பெட்டிகள்.
● சங்கங்கழுக்கான விவசாயப் பயிற்சிப் பாடசாலையில் இணைந்து கொள்ளலாம்.
● காரியாலயத்தில் தோட்டங்கள் அமைக்க.
● பாடசாலையில் தோட்டங்கள் அமைக்க.
போன்ற இன்னும் பல,
மேலும் நீங்கள் எதிர்நோக்கும் விவசாயத்தை அடிப்படையாகக் கொண்ட அத்தனை விடங்கழுக்கும் எம்மாலான உயர் அதிகாரிகழுடனான கலந்துரையாடலின் மூலம் மேலதிக சேவைகள் வழங்கப் படுவதுடன் அச்சேவையை தொடராக வழங்கப்பட்டும் வருவது எமக்கு கிடைத்த வரப்பிரசாதமாகும் எனவே விவசாயப் போதனாசிரியர் அவர்களை காரியாலய தினத்தில் சந்திப்பதன் மூலமோ, அல்லது நேரடியா காரியாலயத்திற்கு விஜயம் செய்தோ உங்கள் விவசாயத்துடன் தொடர்பான தேவைகளை பூர்த்தி செய்து கொள்ளுங்கள்.
மேலதிக விபரங்களுக்கு
☎️AI / Irakkamam 0774640493.