ஈரானின் (Iran) வெளியுறவு அமைச்சர் ஹொசைன் அமிரப்டோலாஹியன் (Hossein Amir-Abdollahian) உயிரிழந்ததையடுத்து, மூத்த ஈரானிய இராஜதந்திரி அலி பகேரி (Ali Bagheri) அந்த பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.
ஈரானின் கிழக்கு அஜர்பைஜான் மாகாணத்தில் உலங்கு வானூர்தி விபத்துக்குள்ளானதில் ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி (Ebrahim Raizi) மற்றும் வெளியுறவு அமைச்சர் ஹொசைன் அமிரப்டோலாஹியன் ஆகியோர் உயிரிழந்தனர்.
மேலும், குறித்த உலங்கு வானூர்தியில் பயணித்த ஈரான் வெளிவிவகார அமைச்சர் ஹுசைன் அமீர் அப்துல்லாஹியான், தளபதி மஹ்தி மூஸவி, ஈரானின் கிழக்கு அஜர்பைஜான் மாகாண ஆளுனர் மாலிக் ரஹ்மதி ஆகியோரும் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அஜர்பைஜான் விஜயம்
அஜர்பைஜானில் குடாஃபரின் அணையை திறந்து வைப்பதற்காக சென்று திரும்பும் போதே இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.