படைவீரர்களை காட்டிக் கொடுக்க வேண்டாம் என முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்ச மற்றும் கோட்டாபய ராஜபக்ச ஆகியோருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தேசிய ஒருங்கமைப்பு ஒன்றியம் என்ற தேசியவாத அமைப்பு இந்த எச்சரிக்கை, கடிதம் மூலம் விடுத்துள்ளது.
தேசத்தை பாதுகாப்பதற்கு அர்ப்பணிப்புக்களைச் செய்த படைவீரர்கள் தொடர்ந்தும் பாதுகாக்கப்பட வேண்டுமென அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
தேசியவாத சக்திகள்
படைவீரர்களுக்கு எதிராக நடவடிக்கைகள் தொடர்பில் மஹிந்த, கோட்டாபய ஆகியோர் மௌனம் காத்து வருவது அதிர்ச்சியையும் ஏமாற்றத்தையும் அளிப்பதாக சுட்டிக்காட்டியுள்ளது.
போரின் பின்னர் படைவீரர்களை பாதுகாப்பதற்கான திட்டங்கள் வகுக்கப்படவில்லை என தெரிவித்துள்ளது.
அரசியல் இருப்பிற்காக தேசியவாத சக்திகள் வழங்கிய ஆணையை உதாசீனம் செய்யக் கூடாது என தெரிவித்துள்ளது.
முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த, கோட்டாபய மற்றும் மொட்டு கட்சி ஆகிய தரப்புக்கள் படைவீரர்களை காட்டிக் கொடுக்கக் கூடாது என தெரிவித்துள்ளது.
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்
முள்ளிவாய்க்காலில் தமிழீழ விடுதலைப் புலிகளின் உயிர் நீத்தவர்களுக்கு நினைவேந்தல் நடத்தப்பட்டமை அதிர்ச்சி அளிப்பதாக சுட்டிக்காட்டியுள்ளது.
இந்த நிகழ்வில் சர்வதேச அரச சர்பற்ற நிறுவனங்களின் பிரதானிகள் பங்கேற்றதாகவும் இந்த விடயத்திற்கு கோட்டாபய, மஹிந்த உள்ளிட்ட தரப்புக்கள் ஏன் எதிர்ப்பை வெளியிடவில்லை என்பது அதிர்ச்சி அளிப்பதாக தெரிவித்துள்ளது.
படைவீரர்களை பாதுகாத்தல், தேசிய சொத்துக்களை பாதுகாத்தல் போன்ற பணிகளை முன்னெடுக்கத் தவறினால் ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் எதிர்காலம் கேள்விக்குறியாக மாறும் என எச்சரிக்கை விடுத்துள்ளது.