(அகமட் கபீர் ஹஷான் அஹமட்)
இன்று(21) இலங்கை அரசாங்கத்தின் பணிப்புரைக்கமைவாக ஈரானிய ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி அவர்களும் அவரது அதிகாரிகளும் விபத்தில் மரணம் அடைந்ததையிட்டு சம்மாந்துறையிலும் துக்க தினம் அனுஷ்டிகப்பட்டது.
சம்மாந்துறை ஹிஜ்ரா சந்தியில் மணிக்கூட்டு கோபுரத்தை அண்டிய பிரதேசங்களில் வெள்ளைக் கொடி கட்டியும் துக்கம் தெரிவித்த சுவரொட்டிகளை காட்சிப்படுத்தியும் தங்களது துக்கத்தை வெளிப்படுத்தினர்.