வாகன விபத்தில் சிக்கி பிரபல கன்னட மற்றும் தெலுங்கு சின்னத்திரை நடிகை பவித்ரா ஜெயராம் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்து சம்பவம் கடந்த ஞாயிற்றுகிழமை (12) இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவது, ஐதராபாத்தில் இருந்து பெங்களூருக்கு தனது குடும்பத்தினருடன் காரில் திரும்பிக் கொண்டிருந்த போது பவித்ரா ஜெயராம் இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளார்.
பவித்ரா ஜெயராமின் வாகன சாரதிக்கு வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் போனமையால் அவர்கள் பயணித்த கார், பேருந்து ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இதில் பவித்ரா ஜெயராம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
மேலும், விபத்தில் காயமடைந்த மேலும் மூவர் சிகிச்சைகளுக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பவித்ராவின் மரணத்துக்கு ரசிகர்கள், திரைப்பிரபலங்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.