கல்முனை பிராந்திய வைத்தியசாலைகளில் உள்ள பல் சிகிச்சைப் பிரிவுகளில் குறிப்பிட்ட சில மருந்துகள் தட்டுப்பாடாகவுள்ளது.
குறித்த மருந்து தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்து சிறந்த சேவையினை வழங்கும் நோக்கில் கல்முனை பிராந்திய வாய் சுகாதார பிரிவு பொறுப்பு வைத்திய அதிகாரி டொக்டர் ஹபீப் முஹம்மட் மிக அவசியத் தேவையாக காணப்பட்ட ஒரு சில மருந்துகளை வழங்கியுள்ளார்.
குறித்த மருந்துப் பொருட்களை அவர் இன்று திங்கட்கிழமை (20) கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி திருமதி சகீலா இஸ்ஸடீன் அவர்களிடம் கையளித்தார்.
இந்நிகழ்வில் பிராந்திய திட்டமிடல் பொறுப்பு வைத்திய அதிகாரி டொக்டர் எம்.சீ.எம்.மாஹிர் மற்றும் பிராந்திய உளநல மருத்துவ பிரிவு பொறுப்பு வைத்திய அதிகாரி டொக்டர் எம்.ஜே.நௌபல் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
டொக்டர் ஹபீப் முஹம்மட்டின் முன்மாதிரியான இந்த செயற்பாட்டினை பாராட்டிய பணிப்பாளர் அவருக்கு நன்றியினையும் தெரிவித்தார்.