மல்லிகைப் பூவின் மருத்துவ குணங்கள்

 


வயிற்றில் பூச்சி இருந்தால் உங்கள் உடல் மெலிவடைவது மட்டுமின்றி உபாதைகள் உண்டாக்குவதோடு, சருமத்தில் வெள்ளைத் திட்டுக்கள் காணப்படும். அப்படியானவர்கள் 4 மல்லிகைப் பூவை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து அந்த நீரை அருந்தி வர வயிற்றில் உள்ள கொக்கி புழு, நாடாப் புழு போன்றவை அழியும். இந்த அறிகுறிகள் இருப்பவர்கள் மட்டுமல்லாமல் பொதுவாக அடிக்கடி பூச்சி வெளியேற மருந்து சாப்பிடுபவர்கள் தவிர அனைவருமே இந்த மல்லிகைத் தண்ணீரை அருந்தலாம்.


இதேப்போல, மல்லிகைப் பூக்களை நிழலில் வைத்து உலர்த்தி, அவற்றை பொடியாக்கி தண்ணீரில் கலந்து குடித்து வர சிறுநீரக கற்கள் தானாகவே கரைந்து போகும்.


வயிற்றில் புண் இருந்தால் வாய்ப்புண் ஏற்படும். இதனை சரிசெய்ய மல்லிகைப் பூவை தண்ணீரில் கொதிக்க வைத்து அது பாதியான பிறகு வடிகட்டி அதனை காலை மாலை என இரு வேளை அருந்தி வர வாய்ப்புண், வயிற்றுப் புண் நீங்கும்.


நோய் எதிர்ப்பு சக்தி இல்லாதவர்கள் மல்லிகைப் பூக்கள் ஒன்றிரண்டை உண்டு வர நோய் எதிர்ப்புச் சக்தி உயரும். இது மட்டுமல்லாமல் அவ்வப்போது ஏற்படும் சில உடல் நலப் பிரச்சினைகளுக்கும் மல்லிகை சிறந்த நிவாரணியாக உள்ளது


மல்லிகைப் பூவிலிருந்து ஒரு வகை எண்ணெய் எடுக்கப்படுகிறது. இந்த எண்ணெய் பல்வேறு உடல் உபாதைகளுக்கு அருமருந்தாக உள்ளது. அடிபட்டாலோ அல்லது சுளுக்குப் பிடித்து வீக்கம் காணப்பட்டாலும், நாள்பட்ட வீக்கமாக இருந்தாலும், மல்லிகைப் பூவை அரைத்துப் பூசினால் வீக்கம் குறையும். உடலில் இந்த எண்ணெயை மசாஜ் செய்யலாம். உடல்வலி நீங்குவதோடு, குளிர்ச்சி அடையும்.


மன அழுத்தம், உடல் சூடு போன்ற பிரச்சினைகளால் பாதிக்கப்பட்ட பெண்கள், மல்லிகைப் பூவை வாங்கி தலையில் வைத்தால் மன அழுத்தமும் குறையும், உடல் சூடும் மாறும்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Section