விரைவில் அமைச்சராகும் மொட்டுக் கட்சி எம் .பி

 



ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க(Ranil Wickremesinghe) தலைமையிலான அமைச்சரவையில் அமைச்சராக ஒருவர் விரைவில் நியமிக்கப்படவுள்ளார் என்று தெரியவருகின்றது.


ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவைப்(Sri Lanka Podujana Peramuna) பிரதிநிதித்துவப்படுத்தும் சிரேஷ்ட அரசியல்வாதியே இவ்வாறு அமைச்சராக நியமிக்கப்படவுள்ளார் என்று அறியமுடிகின்றது.


2000 ஆம் ஆண்டு முதல் நாடாளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி வரும் இவர், இதற்கு முன்னர் பல அரசுகளில் அமைச்சர் பதவிகளை வகித்துள்ளார் என்று கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.


அவருக்கு என்ன அமைச்சுப் பதவி கிடைக்கும் என்பது இதுவரை வெளியாகவில்லை என்று கூறப்படுகின்றது.

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Section