S.M.Z.சித்தீக்
இறக்காமம் பிரதேசத்தைச் சேர்ந்த யூ.கே. ஜபீர் மெளலவி அவர்கள் திடீர் மரண விசாரணை அதிகாரியாக இன்று திங்கட்கிழமை நியமனம் பெற்றார்.
நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ அவர்கள் இவருக்குரிய நியமனக் கடிதத்தை வழங்கி வைத்தார். நீதி இராஜாங்க அமைச்சர் மற்றும் நீதி அமைச்சின் செயலாளர் ஆகியோர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டார்கள்.