புதிய இணைப்பு
ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியின் (Ebrahim Raisi) மறைவுக்கு முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ( Mahinda Rajapaksa) இரங்கல் தெரிவித்துள்ளார்.
தனது எக்ஸ் (X) தளத்தில் இட்ட பதிவிலேயே அவர் இது தொடர்பில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவர் தெரிவிக்கையில்,
"ஈரானின் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி மற்றும் அமீர் அப்துல்லாஹியன் (Amir Abdollahian) உள்ளிட்டோர் ஹெலிகொப்டர் விபத்தில் உயிரிழந்துள்ளதாக கிடைத்த செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், ஜனாதிபதி ரைசி, இலங்கையின் ஒரு உண்மையான நண்பர்.
எனவே, ஈரான் மக்கள் மீதான அவரது தலைமைத்துவமும் அர்ப்பணிப்பும் என்றும் நினைவுகூரப்படும்” என கவலை வெளியிட்டுள்ளார்.
முதலாம் இணைப்பு
உலங்கு வானூர்தி விபத்தில் காணாமல் போயுள்ள ஈரானிய ஜனாதிபதிக்காக பிரார்த்தனை செய்வதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
ஈரானிய ஜனாதிபதி இப்ராஹிம் ராய்சி (Ebrahim Raisi) உள்ளிட்டவர்கள் பயணம் செய்த உலங்கு வானூர்தி விபத்துக்குள்ளானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் உலங்கு வானூர்தி விபத்தில் சிக்கிய ஈரான் ஜனாதிபதி உள்ளிட்ட பிரதிநிதிகளின் பாதுகாப்பிற்காக முக்கியமானது என தெரிவித்துள்ளார்.
நெருக்கடியான தருணம்
மேலும், இந்த நெருக்கடியான தருணத்தில் ஈரானிய மக்களுடன் தானும் இணைந்து கொள்வதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஈரானிய ஜனாதிபதி மற்றும் பிரதிநிதிகளின் பாதுகாப்பிற்காக பிரார்த்தனை செய்வதாக சமூக ஊடகத்தில் மகிந்த ராஜபக்ச பதிவிட்டுள்ளார்.
வெளிவிவகார அமைச்சர்
இதேவேளை, ஈரானிய ஜனாதிபதி பயணம் செய்த உலங்கு வானூர்தி விபத்து தொடர்பில் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரியும்(Ali Sabry) சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ளார்.
ஜனாதிபதி உள்ளிட்ட விபத்தில் சிக்கியவர்களுக்காக பிரார்த்தனையில் ஈடுபடுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.