நாட்டில் 5,000,000 இலத்திரனியல் கடவுச்சீட்டுகளை கொள்வனவு செய்வதற்கான ஒப்பந்தங்களில் குடிவரவு மற்றும் குடிவரவுத் திணைக்களம் கையொப்பமிட்டுள்ளது.
குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம், பொதுப் பாதுகாப்பு அமைச்சில் 5,000,000 இலத்திரனியல் கடவுச்சீட்டுகளை கொள்வனவு செய்வதற்கான உடன்படிக்கை அண்மையில் கைச்சாத்திடப்பட்டது.
இதனடிப்படையில் பயோமெட்ரிக் தரவுகளுடன் கூடிய கடவுச்சீட்டை வைத்திருப்பதன் மூலம், நாடு விட்டு நாடு பயணிக்கும்போது, மக்களை மிகவும் துல்லியமாகவும் விரைவாகவும் அடையாளம் கண்டுகொள்முடியும் என கூறப்பட்டுள்ளது.
[TQXUOES ]
விசா பெறுவதற்கான செயல்முறை
அத்தோடு, தடையின்றி எளிதாகவும் ஒரு நாட்டிற்குள் நுழைய முடியும் என தெரிவிக்கப்படுகிறது.
இலத்திரனியல் கடவுச்சீட்டுகள் கிடைப்பதன் மூலம் விசா பெறுவதற்கான செயல்முறையை துரிதப்படுத்த முடியும் என பொது பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.