உள்ளூராட்சி நிர்வாகம் சுமூகமாக நடைபெறுவதை உறுதி செய்வதற்காக உள்ளூராட்சி தேர்தலை கூடிய விரைவில் நடத்த வேண்டும் என தேர்தல் ஆணையம் (Election Commission) வலியுறுத்தியுள்ளது.
தேர்தல்கள் ஆணைக்குழு அதிகாரிகளுக்கும் பிரதமர் தினேஸ் குணவர்தனவுக்கும் (Dinesh Gunawardena) இடையில் அண்மையில் இடம்பெற்ற சந்திப்பு ஒன்றிலேயே குறித்த விடயம் தொடர்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சந்திப்பின் போது, தேர்தல்கள் ஆணைக்குழுவினால் எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலுக்கான தெரிவுகள் பற்றிய விபரம் பிரதமரிடம் முன்வைக்கப்பட்டுள்ளது.
புதிய முறைமை
இதற்கமைய, தற்போதுள்ள முறைமையிலோ அல்லது புதிதாக வரையறுக்கப்பட்ட முறைமையிலோ இந்தத் தேர்தல்கள் நடத்தப்படலாம் என தேர்தல்கள் ஆணைக்குழுவினால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அதேவேளை, உள்ளூராட்சி தேர்தல் சட்டத்தில் சில குறிப்பிட்ட சட்ட திருத்தங்களை மேற்கொள்வது அவசியம் எனவும் தேர்தலை விரைவில் நடத்த வேண்டும் எனவும் தேர்தல்கள் ஆணைக்குழு அறிவுறுத்தியுள்ளது.