இறக்காமம் கல்வி கோட்டத்தில் இடம்பெற்ற தமிழ் தின போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கான கௌரவிப்பு நிகழ்வு இறக்காமம் றோயல் கனிஷ்ட கல்லூரியின் அதிபர் எம்.ஏ.எம். பஜீர் அவர்களின் தலைமையில் இன்று நடைபெற்றது.
பேச்சுப் போட்டியில் என்.பதீனா சரப் முதலாம் இடத்தையும், ஆக்கத்திறன் வெளிப்பாட்டுப் போட்டியில் ஏ.எம்.மன்ஹாபதீன் முதலாம் இடத்தையும், இசையும் அசையும் போட்டியில் எம். முஸ்னத் ஹாஜரா முதலாம் இடத்தையும், வாசிப்புப் போட்டியில் என். ஐதா ஸெய்னப் இரண்டாம் இடத்தையும், பாவோதல் போட்டியில் எஸ். பாத்திமா அலீனா இரண்டாம் இடத்தையும், எழுத்தாக்கப் போட்டியில் எம்.எப். முஹம்மட் ஷயான் மூன்றாம் இடத்தையும் பெற்று மொத்தமாக ஆறு போட்டிகளில் பங்கு கொண்டு வெற்றியீட்டி உள்ளார்கள் இது இக் கல்லூரிக்கு மதிப்பையும் கௌரவத்தையும் பெற்றுக் கொடுத்துள்ளது.
இவ்வாறான வெற்றிகளை எமது கல்லூரி அடிக்கடி காண்பது தமிழ் தினத்திற்குப் பொறுப்பான ஆசிரியர்களின் பொறுப்பு வாய்ந்த முயற்ச்சி என்பது குறிப்பிடத்தக்க விடயம் எனவும் இக் கல்லூரியின் பெற்றார்களின் தியாகமும் என அதிபர் கருத்துரைத்தார்.