உமர் அறபாத் - ஏறாவூர்
தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் நிதி ஒதுக்கீட்டில் 2024 ம் ஆண்டுக்கான தேசிய இளைஞர் வெசாக் விழா ஏறாவூர் நகர் இளைஞர்கள் கழக சம்மேளனத்தின் ஏற்பாட்டில் ஐஸ்கிறீம் தன்சல் வழங்கும் நிகழ்வு ஒன்று 24/05/2024 வெள்ளிக்கிழமை அன்று ஏறாவூர் பொலிஸ் நிலையம் முன்பாக ஏறாவூர் நகர் பிரதேச செயலக இளைஞர் சேவை உத்தியோகத்தர் எம்.ஐ.எம்.றம்சி தலைமையில் இடம்பெற்றது.
இவ் அன்னதான நிகழ்வில் ஏறாவூர் புளினதலாராம விகாரையின் விகாராதிபதி அலுத்வெல கம்மரத்ன தேரர் மற்றும் ஏறாவூர் நகரசபையின் விஷேட ஆணையாளர் எச்.எம்.எம்.ஹமீம் மற்றும் பொலிஸ் நிலைய அதிகாரிகள் ,ஏறாவூர் நகர் பிரதேச செயலக நிருவாக உத்தியோகத்தர் திருமதி.ஜாஹிதா ஜலால்தீன் ,கலாச்சார உத்தியோகத்தர் எஸ்.ஏ.எம்.நழீம் (நளீமி),
சிரேஷ்ட முகாமைத்துவ உதவியாளர் என்.எம்.ஜாபீர் மற்றும் கிராம உத்தியோகத்தர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
வீதியால் பயணித்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயணிகள் மற்றும் பாதசாரிகளுக்கு
ஐஸ்கிறீம் தன்சல் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது .