S.M.Z.சித்தீக்
கல்முனை பிராந்தி சுகாதார பணிப்பாளர் வைத்தியர் சகிலா இஸ்ஸதீன் அவர்களின் வழிகாட்டலுக்கு அமைவாக இறக்காமம் பிரதேச வைத்தியசாலை மற்றும் சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயமும் இணைந்து இலவச வைத்திய முகாம் ஒன்றை இறக்காமம் குடுவில் அறபா நகரில் ஏற்பாடு செய்திருந்தார்கள்.
இறக்காமம் சுகாதார வைத்திய அதிகாரி இஸ்மாயில் அவர்களால் நேற்று சனிக்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இவ் வைத்திய முகாமில் இறக்காமம் பிரதேச வைத்தியசாலையினுடைய வைத்தியர் டிலான் விதானகே மற்றும் வைத்தியசாலை ஊழியர்களும் கலந்து கொண்டு தங்களது ஒத்துழைப்பை வழங்கி இருந்தமை குறிப்பிடத்தக்கது.
அதிகஸ்டப் பிரதேசமாக காணப்படும் குடுவில் மக்களுக்கு இந்த வைத்திய முகாம் பெரிதும் பயனுள்ளதாக இருந்ததாக கலந்து கொண்ட மக்கள் கல்முனை பிராந்தி சுகாதார பணிப்பாளர் வைத்தியர் சகிலா இஸ்ஸதீன் அவர்களுக்கு நன்றிகளைத் தெரிவித்ததோடு, இது போன்ற வைத்திய முகாம்கள் தொடர்ந்தும் நடைபெற்றால் எமது பிரதேச மக்கள் தொடர்ந்தும் பயன் பெறுவதற்கு உதவியாக இருக்கும் என பலரும் கருத்து தெரிவித்துள்ளார்கள்.