2010/16 இலக்கமுடைய பாடசாலைத் தவணைப் பரீட்சைகளை பாடசாலை மட்டத்தில் நடாத்துதல் எனும் சுற்றறிக்கைக்கு அமைவாக 2024 ஆம் ஆண்டின் முதலாம் தவணைப் பரீட்சையை பாடசாலை மட்டத்தில் நடாத்த வேண்டும்.
இதற்கமைய ஒவ்வொரு பாடசாலையும் தமது ஆசிரியர்கள் மூலம் மாத்திரம் வினாத்தாள்களை உரிய முறைப்படியும் நியதிப்படியும் தயாரித்து. நம்பகத் தன்மையுடன் பரீட்சைகளை நடாத்தவேண்டும்.
அத்துடன் பரீட்சை வினாத்தாள்களை உரிய பாட உதவிக் கல்விப் பணிப்பாளர்கள், ஆசிரிய ஆலோசகர்கள் மற்றும் வளவாளர்களிடம் சமர்பித்து அனுமதி பெற்றதன் பின்னர் பரீட்சையை நடாத்துமாறும் வேண்டப்படுகின்றீர்கள்.
மேலும் பாடசாலை மட்டத்தில் பரீட்சைக்கான நேர அட்டவணையை தயாரித்து நடாத்துவதுடன் குறித்த நேர அட்டவணை மற்றும் வினாத்தாள்களை கோர்வை செய்து பாதுகாப்பாக வைத்துக்கொள்ளுமாறும் தமிழ் பாடசாலைகள் 2024 .05.20 தொடக்கம் 2024.05.30 வரையும் முஸ்லிம் பாடசாலைகள் 2024.06.10 தொடக்கம் 2024.06.20 வரையான காலப்பகுதிகளிலும் பரீட்சைகளை நடைமுறைப்படுத்துமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.