இம்முறை 2024 சிறு போக நெற் செய்கையில் 15 மாவட்டங்களில் விவசாய இரசாயனங்களை ரொவுன் தொழினுட்பத்தில் (Drone Technology) ஊடாக விசுறுவதற்கு விவசாய அமைச்சு தீர்மானம்.
அந்த வகையில் ஹம்மாந்தோட்டை, மொனறாகலை, அம்பாரை, மட்டக்களப்பு, பொலனறுவை, அனுராதபுரம், குருனாகலை, புத்தளம், மன்னார், வவுனியா, கிளிநொச்சி,
நுவரெலிய, மாத்தளை, திருகோணமலை, மற்றும் கப்பஹா போன்ற மாவட்டங்களில் இம்முறை நெற் செய்கையில் ரொவுன் ( Drone ) தொழினுட்பத்தினூடாக விவசாய இரசாயனங்களை விசிற திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்கமைய அந்தந்த கம நல சேவை மத்திய நிலையங்கழுக்கு தலா ஒவ்வொரு ரொவுன் (Drone) இயந்திரம் கிடைக்கப்பெற நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டுள்ளதாகவும் அதன் செயலாளர் காவிந்த திசாநாயக்க தெரிவித்தார்.