சம்மாந்துறையில் உள நல பிரிவு கட்டிடம் திறந்து வைப்பு; மீன் தொட்டியில் கப்பீஸ் மீன்கள் சம்மாந்துறை செய்தியாளர் சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையில் உள நல பிரிவுக்கான சமூக சுகாதார மையத்தின் கட்டிடம் திறந்து வைக்கும் நிகழ்வு சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி எஸ்.ஐ.எம் கபீர் தலைமையில் நேற்று(09) நடைபெற்றது. இன் நிகழ்வில் கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் திருமதி சகீலா இஸ்ஸடீன் ,சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல்.எம் ஹனீபா,கல்முனை பிராந்திய உள நல பிரிவு பொறுப்பு வைத்திய அதிகாரி எம்.ஜே நெளபல்,மாவட்ட மார்பு நோய் சிகிச்சை நிலைய பொறுப்பு வைத்திய அதிகாரி ஏ.எல்.ஏ கபூர்,சம்மாந்துறை ஆதார வைத்தியசாலை உள நல வைத்தியர் கசூன் கடுவெல,சம்மாந்துறை பொலிஸ் நிலைய சிறு குற்றப்பிரிவு பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் ஏ.எம் நெளபீர்,வைத்தியர்கள் மற்றும் பொதுச்சுகாதார பரிசோதகர்கள் என பலரும் கலந்து கொண்டனர். மேலும் சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையில் நீண்ட காலமாக கைவிடப்பட்டிருந்த மீன் தொட்டியானது புனரமைக்கப்பட்டு அதனுள் நுளம்புக் குடம்பிகளை உண்ணக்கூடிய கப்பீஸ் மீன்கள் விடப்பட்டமை குறிப்பிடத்தக்கது




சம்மாந்துறை செய்தியாளர்


சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்தின் உள நல பிரிவுக்கான சமூக சுகாதார மையத்தின்  கட்டிடம் திறந்து வைக்கும் நிகழ்வு சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி எஸ்.ஐ.எம் கபீர் தலைமையில் நேற்று(09) நடைபெற்றது.



இன் நிகழ்வில் கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் திருமதி சகீலா இஸ்ஸடீன் ,சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல்.எம் ஹனீபா,கல்முனை பிராந்திய உள நல பிரிவு பொறுப்பு வைத்திய அதிகாரி எம்.ஜே நெளபல்,மாவட்ட மார்பு நோய் சிகிச்சை நிலைய பொறுப்பு வைத்திய அதிகாரி ஏ.எல்.ஏ கபூர்,சம்மாந்துறை ஆதார வைத்தியசாலை உள நல வைத்தியர் கசூன் கடுவெல,சம்மாந்துறை பொலிஸ் நிலைய சிறு குற்றப்பிரிவு பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் ஏ.எம் நெளபீர்,வைத்தியர்கள் மற்றும் பொதுச்சுகாதார பரிசோதகர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.



மேலும் சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையில் நீண்ட காலமாக கைவிடப்பட்டிருந்த மீன் தொட்டியானது புனரமைக்கப்பட்டு அதனுள் நுளம்புக் குடம்பிகளை உண்ணக்கூடிய கப்பீஸ் மீன்கள் விடப்பட்டமை குறிப்பிடத்தக்கது






Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Section