பிரதான பாதாள உலக உறுப்பினர் ஒருவர் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில்(Bandaranaike International Airport) வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
போலி கடவுச்சீட்டை பயன்படுத்தி வெளிநாட்டுக்கு தப்பிச் செல்ல முயற்சித்த நிலையிலே இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தானியங்கி அடையாள இயந்திரம்
அங்கொட பிரதேசத்தை சேர்ந்த ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
அண்மையில் விமான நிலையத்தில் பொருத்தப்பட்டுள்ள தானியங்கி அடையாள இயந்திரத்தின் மூலம் சந்தேகநபர் அடையாளம் காணப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.