பாகிஸ்தானில்(Pakistan) இருந்து பெரிய வெங்காயத்தை இறக்குமதி செய்ய இலங்கை மீண்டும் நடவடிக்கை எடுத்துள்ளது.
இலங்கையில் பெரிய வெங்காயத்துக்கு பெரும் தட்டுப்பாடு நிலவும் சூழலில் அண்மையில் எகிப்தில் இருந்து பெரிய வெங்காயத்தை இறக்குமதி செய்வது தொடர்பில் வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ (Nalin Fernando) கலந்துரையாடல்களை மேற்கொண்டிருந்தார்.
வெங்காயம் இறக்குமதி
இந்நிலையில் பாகிஸ்தானில் வெங்காயம் ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டதையடுத்து, பாகிஸ்தானில் இருந்து பெரிய வெங்காயத்தை இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாக அத்தியாவசிய உணவுப் பொருட்கள் சங்கத்தின் இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
அதன்படி, பாகிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பெரிய வெங்காயம் அடுத்த வாரத்தில் சந்தையில் விற்பனைக்கு வரவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.