துபாயில் அமைக்கப்படவுள்ள உலகிலேயே மிக பெரிய விமான நிலையம்

 



துபாயில்(Dubai) உலகிலேயே மிகப்பெரிய விமான நிலையம் அமைக்கப்படவுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.


குறித்த விமான நிலையம் தொடர்பில் துபாயின் ஆட்சியாளர் ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் (Sheikh Mohammed bin Rashid Al Maktoum) தெரிவித்துள்ளதாவது,


புதிய விமான நிலையம்

“தற்போது உள்ள சர்வதேச விமான நிலையத்தை விட புதிதாக அமைக்கப்படவுள்ள விமான நிலையம் உலகின் மிக பெரிய விமான நிலையமாக அமைக்கப்படவுள்ளது.


அத்துடன் புதிய விமான நிலையமானது 35 பில்லியன் அமெரிக்க டொலர் மதிப்பில் கட்டப்படவுள்ளதுடன் தற்போதைய சர்வதேச விமான நிலையத்தை விட 5 மடங்கு பெரியதாக அமைக்கப்படவுள்ளது.


இந்த விமான நிலையத்தில் 400 வாயில்கள் மற்றும் 5 ஓடுபாதைகள் அமைக்கப்பட உள்ளது.


இதன் மூலம் சுமார் 260 மில்லியன் பயணிகளுடன் உலகின் மிகப்பெரிய திறன் கொண்ட விமான நிலையமாக  புதிய விமான நிலையம் அமையவுள்ளது.


துபாய் விமான போக்குவரத்து துறை முதன் முறையாக இந்த விமான நிலையத்தில் புதிய விமான தொழில்நுட்பங்களை காண உள்ளது.


மேலும் புதிய விமான நிலையத்தை சுற்றி ஒரு முழு நகரம் கட்டப்படவுள்ளதுடன் புதிய விமான நிலையம் அல்மக்தூம் (Al Maktoum)சர்வதேச விமான நிலையம் என்று அழைக்கப்படும்” என தெரிவித்துள்ளார்.

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Section