காசாவில் இஸ்ரேல் வீசிய குண்டுகள் சில இன்னும் வெடிக்காமல் காசா மண்ணில் புதைந்திருப்பதாகவும் இந்த குண்டுகளை கண்டுபிடித்து அழிக்க 14 ஆண்டுகள் ஆகலாம் என ஐ.நா அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.
ஐக்கிய நாடுகளின் சுரங்க நடவடிக்கை சேவையின் (UNMAS) மூத்த அதிகாரி பெஹ்ர் லோதம்மர் இந்த தகவலை தெரிவித்துள்ளார்.
இஸ்ரேல், காசாவில் 37 டன் குப்பைகளை விட்டு சென்றிருப்பதாக அவர் கூறியுள்ளார். "சுமார் 7 மாதங்களாக நடைபெற்று வரும் போரில் ஏராளமான கட்டிடங்கள் குண்டு வீசி அழிக்கப்பட்டிருப்பதாகவும் இதில் சில குண்டுகள் வெடிக்காமல் இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்நிலையில் எவ்வளவு குண்டுகள் வெடிக்காமல் இருக்கிறது என்பதை துல்லியமாக சொல்ல முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
7,50,000 நாட்கள்
ஒவ்வொரு போரிலும் சுமார் 10% குண்டுகள் வெடிக்காமல் இருக்க வாய்ப்பிருப்பதாகவும் இந்த குண்டுகளை அகற்ற எங்களுக்கு 7,50,000 நாட்கள் ஆகும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
நாங்கள் 100 டிரக்குகளை கொண்டு வேலை தொடங்கினால் கூட இந்த குண்டுகளை அகற்ற 14 ஆண்டுகள் ஆகும்" என்று அவர் கூறியுள்ளார்.
தற்போது வரை முடிவில்லாமல் நடைபெற்றுக்கொண்டிருக்கும் இந்த போரில் 34,000க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.