ஸெய்ன்ஸித்தீக்
இறக்காமம் றோயல் கனிஷ்ட கல்லூரி மாணவி ஹாறூன் லிதாபா கைஸ் மாவட்ட மட்ட கலாச்சாரப் போட்டியில் "கிராமியப்பாடல் இசைத்தல்" நிகழ்ச்சியில் முதலிடம் பெற்று இன்று (2024.04.20) கொழும்பில் நடைபெறவுள்ள தேசியமட்டப் போட்டியில் கலந்து கொள்ள உள்ளார்.
இப்போட்டியானது கொழும்பு "கலாபவனத்தில்" நடைபெறவுள்ளது. இம்மாணவியின் வெற்றிக்கு நிழலாகத் தொடரும் ஆசான்களுக்கும் பெற்றாருக்கும் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வதாக கல்லூரியின் அதிபர் எம்.ஏ.எம். பஜீர் தெரிவித்துள்ளார்.