உயர்தர மாணவர்களுக்கு விசாரணை - பரீட்சை ஆணையாளரின் நடவடிக்கை

 



உயர்தரப் பரீட்சைக்கு தோற்றிய திருகோணமலை (Trincomalee) சாஹிரா கல்லூரி மாணவிகளுக்கு கொழும்பில் நடைபெற இருந்த விசாரணை திருகோணமலைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.


குறித்த விடயம் தொடர்பில், திருகோணமலை (Trincomalee) மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் (Member of Parliament) இம்ரான் மஹ்ரூப் (Imran Mahroob) பரீட்சை ஆணையாளருக்கு (Commissioner of Examinations) நன்றி தெரிவித்துள்ளார்.


சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில், 


மாணவிகளின் கொழும்பு விசாரணை


இம்முறை உயர்தரப் பரீட்சைக்கு தோற்றிய திருகோணமலை சாஹிரா கல்லூரி மாணவிகள் 70 பேரை பரீட்சை தொடர்பான விசாரணைக்கு கொழும்புக்கு வருமாறு பரீட்சை ஆணையாளரினால் அறிவிக்கப்பட்டிருந்தது.


பொருளாதார நெருக்கடி காரணமாக பெற்றோர் தமது பிள்ளைகளை கொழும்புக்கு அழைத்துச் செல்வதில் பல்வேறு சிக்கல்களுக்கு முகங்கொடுத்தனர்.


இந்த விடயத்தை இம்ரான் எம் பி பரீட்சை ஆணையாளரின் கவனத்திற்கு கொண்டு வந்தார். இதனை செவி மடுத்த ஆணையாளர் குறித்த மாணவிகளின் கொழும்பு விசாரணையை இரத்து செய்து அதனை திருகோணமலையில் நடத்த ஒழுங்கு செய்துள்ளார்.


எனினும், விசாரணைக்கான காரணம் எதுவும் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Section