(சியாத்.எம்.இஸ்மாயில்)
இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் ஏற்பாட்டில் அம்பாறை மாவட்டத்திலுள்ள சிவில் சமூக பிரதி நிதிகளுக்கான "ஊடக கல்வியறிவு" பயிற்சி பட்டறை நிந்தவூர் தோம்புக்கண்ட தனியார் ஓய்வு விடுதியில் இன்று (29) நடைபெற்றது .
இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் பயிற்சி இணைப்பாளரும் மற்றும் பயிற்றுவிப்பாளருமான கீர்த்திகா மகாலிங்கத்தின் நெறிப்படுத்தலில் நடைபெற்ற இவ் பயிற்சி பட்டறையில் பிரதான வளவாளராக விடிவெள்ளி பத்திரிகையின் பிரதம ஆசிரியர் எம்.பி.எம். பைறூஸ் கலந்து கொண்டு விரிவுரைகளை வழங்கினார். பல்வேறு தலைப்புக்களில் குழுக்களாக பிரிக்கப்பட்டு விரிவுரைகள் வழங்கப்பட்டதுடன் பங்குபற்றுநர்களின் கேள்விகளுக்கும் விடைகளும் பகிரப்பட்டன.
இந்நிகழ்வில் பத்திரிகை ஸ்தாபனத்தின் உதவி இணைப்பாளர் ஆர். அபிஷேக் மற்றும் அம்பாறை மாவட்டத்தில் உள்ள சிவில் சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள், ஊடகவியலாளர்கள் என பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.