மாளிகைக்காடு அல்-ஹூசைன் வித்தியாலயத்தில் அதிபர் நளீரின் நினைவு மலர் வெளியீடும், இப்தார் நிகழ்வும்!

Dsa
0

 



நூருல் ஹுதா உமர் 


கல்முனை கல்வி வலய மாளிகைக்காடு கமு/கமு/அல்- ஹூசைன் வித்தியாலயத்தில் மூன்று தசாப்தங்களாக கல்விப்பணியாற்றிய அதிபர் மர்ஹூம் ஏ.எல்.எம்.ஏ. நளீர் அவர்களது நினைவாக ‘அடையாளம்’ எனும் பெயரில்  நினைவு மலர் வெளியீடும், இப்தார் நிகழ்வும், பாடசாலை மர்ஹூம் ஏ.எல்.எம்.ஏ. நளீர் திறந்த வெளியரங்கில் நேற்று (2024.04.07) அதிபர் ஏ.சி.எம். நளீம் தலைமையில் இடம்பெற்றது.



இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித்தலைவரும், முன்னாள் இராஜாங்க அமைச்சருமான பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் அவர்கள் கலந்து கொண்டு மறைந்த அதிபர் மர்ஹூம் ஏ.எல்.எம்.ஏ. நளீர் அவர்களது நினைவுகள் தொடர்பில் உரை நிகழ்த்தினார். 



இந்நிகழ்வின் கௌரவ அதிதியாக கல்முனை வலயக் கல்வி பணிப்பாளர் எம்.எஸ்.சஹ்துல் நஜீம் கலந்து கொண்டதுடன் விஷேட அதிதியாக மர்ஹூம் ஏ.எல்.எம்.ஏ. நளீர் அவர்களின் புதல்வர் எம்.ஏ.என். சுஹாத் ஹம்டி அவர்களும் கல்முனை வலயக்கல்வி அலுவலக கணக்காளர் வை. ஹபிபுல்லாஹ், பிரதிக்கல்வி பணிப்பாளர் எம்.எச். ஜாபீர், சம்மாந்துறை வலயக்கல்வி அலுவலக பிரதிக்கல்வி பணிப்பாளர் அரபாத் முஹிதீன், முன்னாள் பிரதிக்கல்வி பணிப்பாளர் ஏ.எல்.எம். முக்தார், பாடசாலை ஸ்தாபக அதிபர் ஏ.எம். இப்ராஹீம், பாராளுமன்ற உறுப்பினரின் மக்கள் தொடர்பாடல் செயலாளர் நூருல் ஹுதா உமர், அரச உயர் அதிகாரிகள், பிராந்திய பாடசாலைகளின் முன்னாள் மற்றும் இந்நாள் அதிபர்கள், அரச உயர் அதிகாரிகள், அரசியல் பிரமுகர்கள், கல்விமான்கள், மர்ஹூம் ஏ.எல்.எம்.ஏ. நளீர் அவர்களது உறவினர்கள் மற்றும் நண்பர்கள், பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள், பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்று குழுவினர், பழைய மாணவர்கள், நலன்விரும்பிகள் என பலரும் கலந்து கொண்டனர். நிகழ்வின்போது அஷ்செய்க் மௌலவி ஏ.கே.எம். சமீர் அவர்கள் துஆ பிராத்தனை நடாத்தினார்.

Tags

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top