பல்கலைக்கழக பெண்கள் விடுதியில் நுழைந்த மர்ம நபரால் பரபரப்பு

 


வவுனியா பல்கலைக்கழகத்தின் பெண்கள் விடுதியில் உள்ளாடையுடன்  நபர் ஒருவர் நுழைந்தமையால் மாணவிகள் மத்தியில் அச்சநிலை ஏற்ப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் கடந்த வெள்ளிக்கிழமை இரவு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பம்பைமடுவில் அமைந்துள்ள வவுனியா பல்கலைக்கழகத்தின் பெண்கள் விடுதியில் இரவு வேளையில் இனம் தெரியாத நபர் ஒருவர் உள்ளாடையுடன் நுழைந்துள்ளார். 

இதனால் அங்கிருந்த மாணவி ஒருவர் அச்சமடைந்து கூச்சலிட்ட நிலையில், குறித்த நபர் தப்பிச்சென்றுள்ளார்.

இதனையடுத்து குறித்த விடயம் தொடர்பில் பாதிக்கப்பட்ட மாணவி தாயாருக்கு தொலைபேசியூடாக தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே இருதய நோயினால் பாதிக்கப்பட்ட மாணவியின் தாயார் இச்சம்பவம் அறிந்ததை அடுத்து ஏற்பட்ட திடீர் நோய் நிலையால் மரணமடைந்தார்.

குறித்த சம்பவத்தால் மாணவிகள் விடுதியில் இருந்து முற்றாக வெளியேறியுள்ளமையுடன் இவ் அநீதிக்கு எதிரான நீதியினை கோரியுள்ளமையுடன் பல்கலைக்கழக மாணவர் விடுதியில் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் ஏன் உள்ளனர் என்ற கேள்வியினையும் எழுப்பியுள்ளனர்.

இதேவேளை உள்ளாடையுடன் நுழைந்த நபர் தொடர்பாக கண்காணிப்பு கெமராக்களின் உதவியுடன் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.



-வவுனியா தீபன்-

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Section