வடமத்திய மாகாணத்தில் இருந்து SLPS -3, SLTES -111, SLEAS -111 ஆகிய மூன்று போட்டிப் பரீட்சைகளிலும் சித்தி அடைந்து நேர்முகப் பரீட்சைக்கு தெரிவாகியுள்ள அளுத்கம தாருல் ஸலாம் வித்தியாலய அதிபர் மொஹமட் பாரூக் சல்மத்துள் ரஹீமாவின் சாதனை புருவம் உயர்த்தி பார்க்கும் அளவுக்கு முக்கியமான விடயமாக உள்ளது.
இதுவரை இவ்வாறான மூன்று பரீட்சைகளிலும் சித்தி அடைந்தவர்கள் அரிது. இவ்வாறான பெண் ஆளுமைகள் பாராட்டி கௌரவிக்கப்பட வேண்டியவர்கள் என்ற வகையில் எமது டுடே சிலோன் ஊடக மையமும் இவரை வாழ்த்துகிறது.