எதிர்காலத்தில் நுகர்வோருக்கு நீர் விநியோகம் செய்வது மிகவும் கடினமாக இருக்கும் என நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சு அறிவித்துள்ளது.
வறட்சி நிலை
தற்போது நிலவும் வறட்சி நிலை காரணமாக அனைத்து பொது சேவை வழங்குநர்களுக்கும் புதிய திட்டங்களில் முதலீடு செய்வது அல்லது வசதிகளை மேம்படுத்துவது சவாலாக உள்ளது என்று அமைச்சு மேலும் குறிப்பிட்டுள்ளது.
மேலும் இந்நிலைமை காரணமாக நீர் விரயத்தை குறைப்பதற்கான தொடர் வழிகாட்டல்களை அறிமுகப்படுத்த அந்த அமைச்சு திட்டமிட்டுள்ளது.