தென்மேற்கு ஆசியாவைச்சூழும் போர் மேகங்கள் - 2 மேலை நாடுகளின் ஸியோனிஸ ஆதரவு

Dsa
0


கலாநிதி றவூப் ஸெய்ன்

பிரிட்டிஷ்காரர்களே பலஸ்தீனில் இஸ்ரேல் என்ற ஒரு புற்றுநோயை உருவாக்கியவர்கள். 1930 களில் இஸ்ஸுத்தீன் கஸ்ஸாம் தலைமையில் யூத அத்துமீறல்களை எதிர்த்து நடாத்தப்பட்ட போராட்டத்தை பிரிட்டிஷ் இராணுவம் படைப்பலம் கொண்டு நசுக்கி பலஸ்தீனர்களின் எதிர்ப்புப்பைக் காயடித்தது அடிபணிய வைத்தது.கிழக்கு ஐரோப்பாவில் சிதறிக்கிடந்த யூதர்களை இங்கே குடியேற்றி அதனை இராணுவ ரீதியிலும் பொருளாதார ரீதியிலும் பலப்படுத்திய முதல் நாடு காலனித்துவ  பிரிட்டிஷ்தான். அதற்கு மூன்று காரணங்கள் இருந்தன.




முதலாவது ஐரோப்பாவிற்கு தலையிடியாக இருந்த யூதர்களை உலகில் எங்கோ ஓர் இடத்திற்கு மடைமாற்றம் செய்வது.இரண்டாவது பலஸ்தீனில் யூத தேசத்தை உருவாக்குவதன் மூலம் மத்திய கிழக்கில் தனது கங்காணி நாடொன்றைப்பராமரித்தல்.மூன்றாவது ஆபிரிக்கா ஆசியா ஐரோப்பா ஆகிய மூன்று கண்டங்களினதும் முச்சந்தியில் உள்ள பாலஸ்தீன இஸ்லாமியப்பண்பாடு மண்டிய நிலம். அது அமைதிப் பூங்காவாக நீடிப்பது இஸ்லாத்தின் பரவலுக்கும் எழுச்சிக்கும் விதை தூவும் .அதைத் தடுக்க கலாசார பண்பாட்டு மத இன மொழி என எந்த வகையிலும் அராபிய முஸ்லிம்களுடன் சம்பந்தப்படாத யூதர்களை அங்கு குடியேற்றுவதன் மூலம் இஸ்லாமிய நாகரிக பண்பாட்டுத் தொடர்ச்சியை அறுத்து விடல். 


இந்த நோக்கங்களை அடைய யூதர்களை பலஸ்தீனில் குடியேற்றிய ஏகாதிபத்திய பிரிட்டன் இன்றுவரை இஸ்ரேலுக்கு முண்டு கொடுத்து வருகிறது. டேவிட் கெமரூன் யூத இனத்தைச்சேர்ந்தவர் என்பதும் கவனிக்கத்தக்கது. பிரிட்டன் பாராளுமன்றில் இன்றுவரை யூத உறுப்பினர்கள் திட்டமிட்டு உள் நுழைந்து வருகின்றனர். தேர்தல் பிரச்சாரத்திற்காக அங்குள்ள யூத ஸியேனிஸ லொப்பி Zionist Lobby உள்ளூர் கிறிஸ்தவ மதச்சார்பற்ற அரசியல்வாதிகளுக்கு நிதியாதரவளிப்பதால் அவர்கள் தாம் பெறும் உதவிக்கான செஞ்சோற்றுக்கடனாக யூத தேசத்தை ஆதரித்து வருகிறார்கள்.ஆக இன்னும் காஸாவில் அப்பாவிப் பெண்களையும் குழந்தைகளையும் இஸ்ரேல் கொடூரமாகக் கொன்று குவிக்கிறதென்றால் அதற்கு முதலில் பொறுப்புக்கூற வேண்டிய நாடு பிரிட்டன் தான் என்பதில் அணுவளவும் ஐயமில்லை.


இந்த பிரிட்டனால் பல்லாண்டுகளாக காலனித்துவப்படுத்தப்பட்ட, அமெரிக்கா செவ்விந்தியர்கள்களின் பூர்வீக தேசம். அந்த இனத்தை சம்ஹாரம் செய்து அவர்களது இடங்களில் வெள்ளையர்களைப் படிப்படியாக்ககுடியேற்றி உருவான ஐக்கிய அமெரிக்கா, முன்னைய பிரிட்டனின் இடத்தை இப்போது பெற்றுள்ளது. இருபதாம் நூற்றாண்டில் தன்னை ஒரு தன்னிகரற்ற வல்லரசாக தகவமைத்துக் கொண்ட அமெரிக்காதான் இன்றைய நாட்களில் இஸ்ரேலை பாலூட்டி வளர்க்கும் பாஸிஸ சக்தி. வருடாந்தம் பலஸ்தீனர்களைக்கொல்ல அமெரிக்கா பத்து பில்லியன் அமெரிக்க டொலர்களை இஸ்லேலுக்கு வழங்குகிறது. மத்திய கிழக்கு நாடுகளை துப்பறியும் உளவுத்துறையை அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்தே பராமரித்து வருகின்றன.


அவ்வப்போது இஸ்ரேல் வெளி அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் போது தேவையான அனைத்து ஆயுதங்களையும் அது இஸ்ரேலுக்கு வழங்குகின்றது. அமெரிக்கா பரப்பிலும் சனத்தொகையிலும் மிகப்பெரிய நாடு. அது மத்திய கிழக்கில் பாலஸ்தீனர்களது நிலத்தை விழுங்கி ஏப்பமிட்டு உருவாக்கியுள்ள சின்னஞ்சிறிய நாடான இஸ்ரேலுக்கு (21,000 சதுர கிலோ மீட்டர்) அதுவும் வெறும் அறுபது லட்சம் யூதர்களைக் கொண்ட ஒரு நாட்டிற்கு ஏன் இவ்வளவு ஆதரவு தருகிறது என்பது ஆச்சரியமான கேள்விதான். அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல் ஒவ்வொன்றிலும் களம் இறங்க வேண்டிய வேட்பாளர் யார் அவரை எப்படி வெற்றிபெறச் செய்யலாம் என்பதைத்தீர்மானிக்கும் வலிமை அமெரிக்க யூதர்களுக்கு உண்டு.


ஐக்கிய அமெரிக்காவின் பொருளாதாரப் பலம் மற்றும் ஊடகப்பலம் யூதர்களின் கைகளிலேயே உள்ளன. AIPAC உலகிலேயே உள்ள மிகப்பெரிய யூத ஸியோனிஸ லொபி .  அமெரிக்க ஜனாதிபதி வேட்பாளருக்கான அத்தனை பிரச்சார செலவீனங்களையும் AIPAC தான் ஏற்கிறது. கைமாறாக யார் அதிகாரத்திற்கு வந்தாலும் ஜனாதிபதியாக,அவர்கள் இஸ்ரேலை ஆதரித்தே ஆக வேண்டும் என்ற கட்டாயம் உருவாகிறது. 1945 ற்குப் பின்னரான அனைத்து அமெரிக்க ஜனாதிபதிகளும் இஸ்ரேல் ஆதரவு நிலைப்பாடுகளையே எடுத்துவந்துள்ளதன் பின்புலம் இதுவே. இஸ்ரேல் உருவாக்கத்திற்குப் பின்னரான கடந்த 75 ஆண்டுகளில் பாதுகாப்புச்சபை இஸ்லேலுக்கு எதிராக 80 தீர்மானங்களைக் கொண்டுவந்துள்ளது. அவை அனைத்தையும் தனது ஒற்றை வீட்டோ ரத்ததிகாரத்தால் நடைமுறைக்கு வராமல் வொஷிங்கடன் தடுத்துள்ளதும்  இந்தப் பின்புலத்தில் தான்.


அறபு நாடுகளைப் பொறுத்தவரை தமது மன்னராட்சியைத் தக்க வைபபது மட்டுமே அவர்களது ஒரே இலக்கு எனவே அவர்கள் எப்போதும் ஜனநாயகம் பற்றிப் பேசும் அமெரிக்காவின் கைப்பாவையாக இருப்பதே பாதுகாப்பானது என்று தீர்மானித்து விட்டன. எங்களுக்கு குறைந்த விலையில் எண்ணெய் தாருங்கள். இஸ்ரேலை ஆதரித்து வாழவையுங்கள். அனைத்துலக இஸ்லாமியவாதத்தை (pan Islamism) காயடியுங்கள் . உங்கள் மன்னராட்சியை நாம் அங்கீகரிப்போம். தேவையானால் ஆயுதப்பலம் கொண்டும் பாதுகாப்போம். என்கிறது வொஷங்டன் .( அமெரிக்க ஸவூதி ஒப்பந்தங்கள் ) 


இதை முழைமையாக ஏற்றுக்கொண்டு தமது கொத்தடிமைத்தனத்தை வெளிக்காட்டிவருகிறார்கள் மன்னர்கள். கடந்த வார இறுதியில் ஈரான் மேற்கொண்ட ஏவுகணைத்தாக்குதல்களை இடைமறித்ததில் அமெரிக்கா பிரிட்டன் மட்டுமன்றி ஸவூதி அரேபியா மற்றும் ஜோர்தான் என்பனவும் களமிறங்கியதை இந்தப்பின்புலத்தில் இருந்து பார்க்கலாம்.வரலாற்று ரீதியாக இஸ்ரேல் என்ற சட்டவிரோத நாட்டை மத்திய கிழக்கில் உருவாக்க களத்தைத் தயார் செய்த நாடுகளில் மேலே குறிப்பிட்ட இரு அறபு நாடுகளினதும் பங்கு முக்கியமானது. 


ஆக மத்திய கிழக்கில் இஸ்ரேல்- ஈரான் போர் ஒன்று மூழுமானால் இந்த நாடுகள் அனைத்தும் ஒரேயணியில் ஈரானை எதிர்த்து நிற்கும் என்பதில் ஐயமில்லை. மறுபுறம் ஈரானின் எதிர்தாக்குதலுக்கு இந்த அமெரிக்க ஸியோனிஸ ஆதரவு அறபு நாடுகளும் இலக்காகும் என்பதிலும் சந்தேகமில்லை. ஈரான் ஜனாதிபதி இப்றாஹீம் றைஸி முந்தநாள் தேசிய இராணுவ அணிவகுப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் அமெரிக்க ஆதரவு அறபு நாடுகளை கடுமையாக எச்சரித்துள்ளார். தாமும் இதற்கு விலை கொடுக்க நேரிடும் என அவர் தெரிவித்துள்ளார்.


மொத்தத்தில் மேற்கு ஆசியாவைச்சூழும் போர் மேகங்களும் போர் மோகங்களும் முழுப்பிராந்தியத்தையும் முடக்கி முழு அளவிலான யுதத்தத்திற்குள் மூழ்கடிக்கும் பேராபத்து உள்ளது. அது உலக மக்கள் ஒவ்வொருவரையும் பாதிக்கும் அபாயம் உள்ளது. இது எவ்விலை கொடுத்தாயினும் தவிர்க்கப்பட வேண்டும் என்பதே உலக மக்களின் எதிர்பார்ப்பு.




Tags

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top