06 கோடி ரூபா ஹெரோயினுடன் இளைஞன் கைது

0


 சுமார் 06 கோடி ரூபா பெறுமதியான ஹெரோயின் போதைப்பொருளை கடத்திய நபரை மாளிகாவத்தை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

மாளிகாவத்தை பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் குறித்த போதைப்பொருளை கிராண்ட்பாஸ் பகுதிக்கு கொண்டு செல்லும் போதே சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக குறிப்பிடப்படுகின்றது.

அங்கு சந்தேகநபரிடம் இருந்து ஒரு கிலோ 105 கிராம் ஹெரோயின் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டதுடன், போதைப்பொருள் கடத்தல் மூலம் ஈட்டிய 750,000 ரூபாவும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டது.

சந்தேக நபர் வெல்லம்பிட்டிய 

பிரதேசத்தைச் சேர்ந்த 25 வயதுடைய இளைஞர் என்பதுடன், தற்போது டுபாயில் தலைமறைவாகியுள்ள 'கெசல்வத்த தினுக' என்ற ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல் தலைவரின் உதவியாளர் எனத் தெரியவந்துள்ளது.

வெளிநாட்டுக்கு தப்பிச் சென்றுள்ள குற்றக் கும்பலைச் சேர்ந்தவர்களிடம் இருந்து கிடைக்கும் அறிவுறுத்தலின் அடிப்படையில் சந்தேக நபர் போதைப் பொருள்களை அந்தந்தப் பகுதிகளுக்கு எடுத்துச் சென்று விற்பனையாளர்களிடம் கொடுத்து பணப் பரிமாற்றம் செய்துள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் இன்று (11) மாளிகாகந்த 2ஆம் இலக்க நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

Tags

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top