கௌறவ பாராளு மன்ற உறுப்பினர் எஸ்.எம்.எம் முஷராப் அவர்களின் ஏற்பாட்டில் இறக்காமம் பிரதேச இணைப்புச் செயலாளர் எஸ்.எல். எம் ரஜா அவர்களின் தலைமையில் இறக்காமம் பிரதேசத்தில் உள்ள 45 வயதுக்கு மேற்பட்ட பொதுமக்களுக்கு இலவச மூக்கு கண்ணாடி வழங்கும் நிகழ்வு இறக்காமம் சுகாதார வைத்திய காரியாலயத்தில் நேற்று (17) இடம்பெற்றது.
இந்நிகழ்வில் ஏராளமான பொதுமக்கள் வருகை தந்திருந்தனர் கண் பரிசீலினை செய்யப்பட்டு அதில் சுமார் 250 பேருக்கு மாத்திரம் இலவச மூக்கு கண்ணாடி வழங்க தகவல்கள் பெறப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் தகவல்கள் பெறப்பட்ட பொதுமக்களுக்கான மூக்கு கண்ணாடிகள் இன்னும் ஒரு சில தினங்களுக்குள் வழங்கப்பட உள்ளதாகவும் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம.எம்.முஷரப் அவர்களின் இரக்கம பிரதேச இணைப்புச் செயலாளர் எஸ்.எல்.எம். ராஜா தெரிவித்தார்.