நாங்கள் தானாக முன்வந்து புதிய வரிகளை அறிமுகப்படுத்தவில்லை. பெரும்பாலும் ஒரு கிராமத்தில் வசிப்பவன் என்ற முறையில், மக்களின் அழுத்தத்தை நான் நன்கு அறிவேன். ஜனாதிபதிக்கும் இது நன்றாகவே தெரியும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணல் ஒன்றின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
அரசாங்கத்தின் வருமானம் ஸ்திரமான நிலைமையை அடையும்போது முதல்முறையாக நாட்டு மக்களுக்கு நிவாரணம் வழங்கப்படுகிறது.
அதனால்தான் பாடசாலை உபகரணங்களுக்கான வரிகள் கூட நீக்கப்படுகின்றன.
ஒரு வருடத்திற்கு முன்பு நாங்கள் அபிவிருத்தி பற்றிப் பேசவில்லை. சிறிய அபிவிருத்திப் பணிகளைச் செய்தவர்களுக்கு 60 ஆயிரம் கோடி கடன்பட்டுள்ளோம்.
ஆனால் அதையெல்லாம் செலுத்தி புதிய பணிகளை ஆரம்பிக்க ஒவ்வொரு பிரதேச செயலகத்திற்கும் 25 கோடி ரூபா ஒதுக்கப்பட்டது.
இவற்றை முறையாகப் பின்பற்றினால் குறுகிய காலத்தில் சிறந்த நிலைக்குச் சென்றுவிட முடியும் என குறிப்பிட்டுள்ளார்.