S.M.Z.சித்தீக்
ஒவ்வொரு ஆண்டும் சர்வதேச காடுகள் தினமானது மார்ச் மாதம் 21 ஆம் ஆண்டு கொண்டாடப்படுகிறது. இதனைக் கொண்டாடுவதற்கு முக்கிய காரணம் உலகெங்கிலும் உள்ள காடுகளை அதன் பல்லுயிர்ப்புத் தன்மையும் பாதுகாப்பதன் பொருட்டு கொண்டாடப்படுகிறது. உலக அளவில் 30 சதவீதமான காடுகள் உள்ளன. மேலும் ஒவ்வொரு ஆண்டுக்கும் கிட்டத்தட்ட 32 மில்லியன் மரங்களானது அழிக்கப்படுகிற அபாயம் உள்ளது.
காடுகளானது பல்வேறு உயிரினங்களுக்கு இன்றியமையாத ஒரு புகலிடம் ஆகும். புவி வெப்பமயமாதலைத் தடுக்கும் முக்கிய காரணியாக காடுகள் செயல்படுகிறது. 2012 ஆம் ஆண்டில் நவம்பர் 28 ஆம் நாள் ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் தீர்மானத்தின்படி ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 21 சர்வதேச காடுகள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நாள் பல்வேறு நாடுகளிலும் காடுகளின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வைக் கொண்டாடும் வகையில் பிரகடனப்படுத்தப்பட்டது.