மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சனா விஜேசேகர அதானி கிரீன் எனர்ஜி என்ற அதானி பசுமை சக்தி நிறுவனத்தின் இரண்டு மூத்த அதிகாரிகளை சந்தித்துள்ளார்.
அதானி கிரீன் எனர்ஜியின் நிர்வாக இயக்குநர் சாகர் அதானி மற்றும் அதானி எனர்ஜி சொல்யூஸனின்; நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி அனில் சர்தானா ஆகியோர் நேற்றுமுன்தினம் (14.03.2024) மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சகத்தில் அமைச்சர் விஜேசேகரவை சந்தித்தனர்.
மன்னார் மற்றும் பூனகரியில்; 484 மெகாவாட் காற்றாலை மின் திட்டத்திற்கான மின்சார கொள்முதல் ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தைகளுக்காக குறித்த இரண்டு அதிகாரிகள் இலங்கை வந்துள்ளனர்.
இந்தநிலையில் மன்னாரில் 250 மெகாவோட் மற்றும் பூனகரியில்; 234 மெகாவோட் மின்சாரத்தை தேசிய மின்கட்டமைப்பில் சேர்க்க இலங்கை எதிர்பார்க்கிறது என்று அமைச்சர் தனது எக்ஸ் பதிவில் தெரிவித்துள்ளார்.