நுகர்வோர் விவகார அதிகார சபையின் தலைவர் சட்டத்தரணி சாந்த நிரியல்ல இன்று (8) தனது பதவியை இராஜினாமா செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
வர்த்தக, வாணிப மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சர் நளின் பெர்னாண்டோ ஒரு வாரத்திற்கு முன்னர் தலைவர் உள்ளிட்ட பணிப்பாளர் சபையை இராஜினாமா செய்யுமாறு அறிவித்திருந்த நிலையிலேயே இவர் தலைவர் பதிவியிலிருந்து இராஜினாமா செய்துள்ளார்.