இந்திய கிரிக்கட் அணியின் முன்னாள் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் மகேந்திரசிங் டோனி ஐ.பி.எல்., அரங்கில் இருந்து விடைபெறவுள்ளதாக கிரிக்கட் ஆர்வலர்களின் கருத்து அமைந்துள்ளது.
ஐ.பி.எல்., தொடரின் 17 ஆவது தொடர் , இம்மாதம் 22ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.
இந்தியாவின் சென்னை - சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் முதல் போட்டியில்(22.03.2024) டோனி தலைமையிலான சென்னை அணி, பெங்களூர் அணியை எதிர்கொள்கிறது.
இப்போட்டிக்குப் பின் டோனி ஓய்வு பெறுவார் என செய்திகள் வெளியாகியுள்ளன.
'சென்னையில் தான் எனது கடைசி போட்டி' என டோனி இதற்கு முன்னதாக தெரிவித்திருந்த நிலையில் அவர் வெளியிட்ட இணையதள செய்தியில்,' புதிய தொடர், புதிய 'கதாபாத்திரம்'. இதற்காக காத்திருக்க முடியவில்லை. பொறுத்திருந்து பாருங்கள்,' என தெரிவித்துள்ளார்.
மேலும் சென்னை அணி நிர்வாகம் வெளியிட்ட செய்தியில்,' புதிய கதாபாத்திரத்தில் களமிறங்க காத்திருக்கும் 'லியோ' என தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக டோனி முதல் போட்டியுடன் விடைபெற்று, சென்னை அணியின் ஆலோசகராக செயல்படலாம் எனவும் புதிய தலைவராக ஜடேஜா அல்லது இளம் வீரர் ருதுராஜ் நியமிக்கப்பட வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது.