கனடாவில் படுகொலை செய்யப்பட்ட இலங்கையர்கள் : பிரேத பரிசோதனை தொடர்பில் வெளியான தகவல்

 


கனடா, ஒட்டாவாவில் படுகொலை செய்யப்பட்ட இலங்கையர்களின் பிரேத பரிசோதனைகள் நிறைவடைந்துள்ளதாக ஒட்டாவா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


இதேவேளை, படுகொலை செய்யப்பட்ட இலங்கையர்களின் உறவினர்கள் அடுத்த சில நாட்களில் கனடாவுக்கு வந்ததன் பின்னர் இறுதிச் சடங்குகளை நடத்த திட்டமிட்டுள்ளதாக கனடாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் ஹர்ஷ நவரத்ன தெரிவித்துள்ளார்.


இதற்கமைய தனுஷ்கவின் சகோதரர் மற்றும் உறவினர்களை ஒட்டாவாவுக்கு அழைத்து வருவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கனடாவிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகர் தெரிவித்துள்ளார்.


ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உட்பட 6 இலங்கையர்கள் கனடாவின் ஒட்டாவாவின் புறநகர் பகுதியான பார்ஹேவன் இல் உள்ள அவர்களது வீட்டில் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டிருந்தனர்.


சம்பவம் தொடர்பில் அவர்களுடன் ஒரே வீட்டில் தங்கியிருந்த கனடாவில் கல்வி கற்கும் பிராங்க் டி சொய்சா என்ற 19 வயதுடைய இலங்கை இளைஞனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.


இந்நிலையில், படுகொலை செய்யப்பட்ட குடும்பம் சில தினங்களுக்கு முன்னர் ஏற்பாடு செய்திருந்த நிகழ்வொன்றின் காட்சிகளை அந்நாட்டு ஊடகங்கள் செய்தியாக வெளியிட்டுள்ளன. 


இந்த படுகொலை சம்பவத்தின் பிரதான சந்தேகநபரான பிராங்க் டி சொய்சாவின் 19 ஆவது பிறந்த நாள் எவ்வாறு கொண்டாடப்பட்டது என்ற காட்சிகளையும் வெளியிட்டுள்ளனர்.


இந்த கொலை நடந்த அதே வீட்டில் அவரது பிறந்தநாள் கொண்டாடப்பட்டதாகவும், அன்றைய தினம் அவருக்கு சீஸ் கேக் சாப்பிட ஆசை இருந்ததாகவும், அதன்படி தனுஷ்க மற்றும் குடும்ப உறுப்பினர்கள் அவருக்கு சீஸ் கேக்கை வழங்கியதாகவும் தனுஷ்கவின் குடும்ப நண்பர்கள் குறிப்பிட்டுள்ளனர்.


இந்த தாக்குதலில் உயிர் பிழைத்து பலத்த காயங்களுக்கு உள்ளான தனுஷ்க விக்ரமசிங்க தற்போது இரண்டு சத்திரசிகிச்சைகளுக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


அவரது உடல்நிலையில் முன்னேற்றம் காணப்படுவதாகவும், அவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று முடித்த பின்னர் அவரை கவனித்துக் கொள்வதாகவும் ஒட்டாவிலுள்ள ஹில்டா ஜயவர்த்தனாராம விகாரை அறிவித்துள்ளது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Section