திருமணம் நடந்த 3 மணி நேரத்திலேயே மணமகன் உயிரிழந்த சம்பவமொன்று இந்தியாவின் உத்தர பிரதேச மாநிலத்தில் பதிவாகியுள்ளது.
திருமணம் முடிந்து வீடு திரும்பிய போது எதிரில் வந்த டிராக்டர் மோதி மோட்டார் சைக்கிளில் சென்றுக் கொண்டு இருந்த மணமகன் உயிரிழந்துள்ளார்.
மோட்டார் சைக்கிளில் மணமகனும், அவரின் தாயும் பயணித்துள்ள நிலையில் தாய் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சடங்குகளுக்காக மணமகள் அவரது வீட்டிற்கு அழைத்து செல்லப்பட்டதால் இந்த விபத்தில இருந்து உயிர்தப்பியுள்ளார்.
திருமணம் நடந்து முடிந்த 3 மணி நேரத்தில் மணமகன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.