அரசியல்வாதிகளின் பாதுகாப்பு தொடர்பில் விசேட நடவடிக்கை

 


பாதுகாப்பு அச்சுறுத்தல் இல்லாவிட்டாலும் உயரதிகாரிகள் வழங்கப்பட்டுள்ள அரசியல்வாதிகள் மற்றும் பல தரப்பட்ட உயரதிகாரிகள் தொடர்பில் விசாரணை நடத்தி அறிக்கைகளை உடனடியாக சமர்ப்பிக்குமாறு பொது பாதுகாப்பு அமைச்சர் டிரன் அலஸ் கடந்த வாரம் அரச புலனாய்வு சேவைக்கு அறிவித்துள்ளார்.


இது தொடர்பில் எமது விசாரனையில் கருத்து தெரிவித்த திரு.திரன் அலஸ், அரசியல்வாதிகளுக்கும் ஏனையவர்களுக்கும் தேவையற்ற வகையில் வழங்கப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர்கள் விரைவில் நீக்கப்படுவார்கள் என டிரன் அலஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.


இதன்படி சுமார் ஐயாயிரம் பொலிஸ் உத்தியோகத்தர்கள் தமது பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் இல்லாத அரசியல் பிரமுகர்களுக்கு இவ்வாறு சேவையில் ஈடுபடுத்தப்படுவதாக தமக்கு தகவல் கிடைத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


இந்நிலைமை காரணமாக பொலிஸாரின் பொது கடமைகளுக்கு பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு பாரிய தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Section