அதாவது மின் துண்டிக்கப்படும் போது அக்கரைப்பற்று ஆலையடிவேம்பு அட்டாளைச்சேனை பாலமுனை ,ஒலுவில் போன்ற பிரதேசங்களுக்கு நீரும் தடைபட்டு இருந்தது. இது 2017 ஆம் ஆண்டு ஜெனரேட்டர் பழுதடைந்ததன் காரணமாக ஏற்பட்டது.
இதனை நிவர்த்தி செய்யும் முகமாக எமது பிராந்திய முகாமையாளரினதும் பிரதம பொறியாளரினதும் முயற்சியினால் இரண்டு கோடி ரூபாய் செலவில் திருத்தம் செய்யப்பட்டு மீண்டும் ஜெனரேட்டர் இயங்க விடப்பட்டுள்ளது. இதற்கு உதவியாக இருந்த நிலையைப் பொறுப்பதிகாரி ,பிரதேச பொறியியலாளர், இயந்திர பொறியியலாளர் , உதவி பொது முகாமையாளர், துணை பொது முகாமையாளர் , பிரதி பொது முகாமையாளர்,பொது முகாமையாளர் ஆகியோருக்கும் எமது நன்றியை தெரிவித்துக் கொள்கின்றோம்.