பிரான்ஸ் வாழ் தமிழீழ மக்களுக்கான வேட்புமனு தாக்கல் மார்ச்16 முதல் ஆரம்பமாகவுள்ளதாக நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரான்ஸ் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் நான்காவது அவைக்கான, பிரான்ஸ் நாட்டுப் பிரதிநிதிகளைத் தெரிவு செய்வதற்கான தேர்தல், எதிர்வரும் மே மாதம் 05ஆம் திகதியன்று பிரான்சில் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேட்புமனு தாக்கல்
இதன்போது மொத்தம் 10 பிரதிநிதிகள் தெரிவு செய்யப்பட உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அந்தவகையில், பின்வரும் தொகுதிகளுக்கான பிரதிநிதிகள் தெரிவுசெய்யப்படவுள்ளதாக கூறப்படுகின்றது.
Nord du France
75 - Paris
78 - Yvelines
92 - Hauts - de - Seine
94 - Val de Marne
Sud du France
77 - Seine - et - Marne
91 - Essonne
93 - Seine - Saint - Denis
95 - Val - d'Oise
மேற்குறித்த தொகுதிகளில் வாழ்பவர்கள் அந்தந்த தொகுதிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையிற் போட்டியிடுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் நான்காவது தவணைக் காலத்துக்கான வேட்புமனு தாக்கல் மார்ச் 16ஆம் திகதியன்று தொடங்குவதுடன் வேட்புமனுத் தாக்கல் முடிவு ஏப்ரல் 14ஆம் திகதி மாலை 6.00 மணி வரை காணப்படுவதாகவும் கட்டுப்பணம் - 500, 00 யூறோக்கள் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன் இந்த தேர்தலுக்கான வேட்புமனுவைத் தாக்கல் செய்ய விரும்புவர்கள் கீழ்க்காணும் முகவரியில் 17 rue Philip Girard 75010 Paris திங்கள், செவ்வாய், புதன், வியாழன் ஆகிய கிழமை நாட்களில், மாலை 03 மணி தொடக்கம் 06 மணி வரை, இதற்குரிய விண்ணப்பப் படிவங்களைப் பெற்றுக் கொள்ளலாம் என கூறப்படுகின்றது.
மேலதிக விபரங்களுக்கு : puthulaku@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியூடாக அல்லது www.tgte-us.org / www.tgte.org மற்றும் இணையம் ஊடாக தொடர்பு கொள்ள முடியும் என நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரான்ஸ் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.