ஜப்பானின் கிழக்குப் பகுதியில் இன்று(14) வெள்ளிக்கிழமை அதிகாலை 5.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக ஜப்பான் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நிலநடுக்கத்தின் மையம் புகுசிமா மாகாணத்தின் கடற்கரையை மையப்படுத்தியிருந்தது.
அங்கு வலுவான நடுக்கம் பதிவாகியுள்ளது, எனினும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில்லை.
இந்தநிலையில் சேத விபரங்கள் தொடர்பில் தகவல்கள் எவையும் வெளியாகவில்லை.